மஞ்சூர் – கோவை மலைப்பாதையில் காரை வழிமறித்து ஆவேசமாக தாக்கிய காட்டு யானை: குழந்தையுடன் தம்பதி உயிர் தப்பினர் | wild elephant blocked the path of car on the Manjoor to Coimbatore mountain road

ஊட்டி: மஞ்​சூர் – கோவை மலைப்​பாதை​யில் காரை வழிமறித்து காட்டு யானை ஆவேச​மாக தாக்​கிய​தில் கார் சேதமடைந்​தது. குழந்​தை​யுடன் சென்ற தம்​ப​தி​யினர் அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினர். நீல​கிரி மாவட்​டம் மஞ்​சூரில் இருந்து கெத்தை வழி​யாக கோவை மாவட்​டம் காரமடை மற்​றும் பெரிய​நாயக்​கன்​பாளை​யம் பகு​திக்கு சாலை செல்​கிறது. இந்த சாலை​யையொட்டி அடர்ந்த வனப்​பகு​தி​கள் மற்​றும் தேயிலை தோட்​டம் உள்​ள​தால் வன விலங்​கு​களின் நடமாட்​டம் அதி​க​மாக காணப்​படு​கிறது.

இதனால் இரவு நேரங்​களில் அந்த பகு​தி​யில் வாகன போக்​கு​வரத்துக்கு தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், சமீப நாட்​களாக அந்த பகு​தி​யில் 3 குட்டி யானை​கள் அடங்​கிய யானை கூட்​டம் சுற்​றித் திரி​கிறது. இந்த யானை கூட்​டம் கடந்த சில நாட்​களாக அந்த வழி​யாக செல்​லும் வாக​னங்​களை வழி மறிக்​கிறது. இதனால் அந்த வழி​யாக செல்​லும் வாகன ஓட்​டிகள் அச்​சத்​துடன் செல்​கின்​றனர். ஒரு சில சமயங்​களில் ஒரு மணி நேரத்​துக்கும் மேலாக சாலை​யில் அரசு பேருந்தை நிறுத்த வேண்​டிய சூழ்​நிலை ஏற்​படு​கிறது.

நேற்​று​முன்​தினம் மஞ்​சூர் அடுத்த குந்தா பாலம் பகு​தியை சேர்ந்த தீபக்​(35) என்​பவர் தனது மனைவி மற்​றும் குழந்​தை​யுடன் கெத்​தைக்கு காரில் சென்று கொண்​டிருந்​தார். அப்​போது மலைப்​பாதை​யில் கூட்​டத்​துடன் சென்ற யானை ஒன்று பின்​னோக்கி வந்து காரை வழிமறித்து ஆவேச​மாக சத்​தமிட்​ட​வாறு தாக்​கியது.

வனத்துறையினர் விசாரணை: கண்​ணாடிகள் அனைத்​தும் உடைந்து நொறுங்கி காருக்கு உள்​ளே​யும் வெளி​யே​யும் விழுந்​தன. ஒரு சில விநாடிகளில் இந்த சம்​பவம் நடந்​த​தால், காருக்​குள் இருந்​தவர்​கள் அதிர்ச்​சி​யில் உறைந்து சத்​தம் போட்​டனர். மேலும், அந்த நேரத்​தில் பின்​னால் வந்த வாகன ஓட்​டிகளும் சத்​தம் போட்​ட​தால் யானை ஒரு வழி​யாக மீண்​டும் வனப்​பகு​திக்​குள் சென்​றது. இதனால், குழந்​தை​யுடன் காரில் இருந்த தம்​பதி அதிர்​ஷ்ட​வச​மாக உயிர் தப்​பினர். இதுகுறித்து குந்​தா வனத்​துறை​யினர்​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

நன்றி

Leave a Reply