BEL Recruitment 2025: பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் காலியாக உள்ள 340 Probationary Engineer (PE) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு ஆர்வமும், உரிய தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 14.11.2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்தப் பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கல்வித் தகுதி என்ன, விண்ணப்பிப்பது எப்படி, வயது வரம்பு எவ்வளவு என்பது குறித்த விரிவான தகவல்களைப் பார்ப்போம்.
BEL Recruitment 2025
| Description | Details |
| வேலை பிரிவு | Central Govt Jobs 2025 மத்திய அரசு வேலை 2025 |
| துறைகள் | பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) Bharat Heavy Electricals Limited (BHEL) |
| காலியிடங்கள் | 340 |
| பணிகள் | Probationary Engineer (PE) |
| விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
| கடைசி தேதி | 14.11.2025 |
| பணியிடம் | தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://bel-india.in/ |
BEL Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனம் 2025 ஆம் ஆண்டிற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் கீழ், Probationary Engineer (PE) பதவிக்கு மொத்தம் 340 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் விரிவான தகவல்களைப் பெற, அதிகாரபூர்வ அறிவிப்பைப் பார்வையிடவும்.
| பணியின் பெயர் | காலியிடங்கள் |
| Probationary Engineer (PE) | 340 |
| மொத்தம் | 340 |
BEL Probationary Engineer Recruitment 2025 கல்வித் தகுதி
Probationary Engineer (PE) பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட இந்திய பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் B.E / B.Tech / B.Sc Engineering Degree ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
BEL Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
பெல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 Probationary Engineer பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்தவராகவும் அதிகபட்சம் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பிரிவு வாரியாக உயர் வயது வரம்பில் பின்வரும் தளர்வுகள் வழங்கப்படுகின்றன:
- SC/ ST விண்ணப்பதாரர்களுக்கு: 5 ஆண்டுகள்
- OBC விண்ணப்பதாரர்களுக்கு: 3 ஆண்டுகள்
- முன்னாள் ராணுவத்தினர் (Ex-Servicemen): அரசு கொள்கையின்படி தளர்வு உண்டு.
- PwBD (Gen/ EWS) விண்ணப்பதாரர்களுக்கு: 10 ஆண்டுகள்
- PwBD (SC/ ST) விண்ணப்பதாரர்களுக்கு: 15 ஆண்டுகள்
- PwBD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு: 13 ஆண்டுகள்
BEL Recruitment 2025 சம்பள விவரங்கள்
BEL நிறுவனத்தில் Probationary Engineer (PE) பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.40,000/- முதல் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
BEL Probationary Engineer Recruitment 2025 தேர்வு செயல்முறை
BEL நிறுவனத்தில் Probationary Engineer (PE) பணிக்குத் தகுதியான விண்ணப்பதாரர்கள், முதலில் கணினி அடிப்படையிலான தேர்வு (Computer Based Test) மற்றும் அதைத் தொடர்ந்து நேர்காணல் (Interview) ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் துல்லியமான தேர்வு முறைகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பைச் சரிபார்க்கவும்.
BEL Probationary Engineer Recruitment 2025 விண்ணப்பக் கட்டணம்:
| விண்ணப்பக் கட்டணம் | விண்ணப்பதாரர் பிரிவு |
| கட்டணம் இல்லை | ST, SC, முன்னாள் ராணுவத்தினர் (Ex-s), PWD |
| ரூ.1,180/- | மற்ற பிரிவினர் (Others) |
BEL Probationary Engineer Recruitment 2025 முக்கிய தேதிகள்:
விண்ணப்ப செயல்முறைக்குரிய முக்கிய தேதிகள்:
- விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 24.10.2025
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.11.2025
BEL Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
பெல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025 பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள அனைத்து தேவையான ஆவணங்களுடன், 24.10.2025 முதல் 14.11.2025 தேதிக்குள் https://bel-india.in/ என்ற பெல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click Here |
| ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |



