மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு

இலங்கையில் மத வழிபாட்டுத் தலங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சட்டம் ஒழுங்கை பேணவும் அமைதியான சூழலை உறுதி செய்யவும் அனைத்து சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களுக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

குறிப்பாக மத வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு அதிகரிக்க கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

தங்களது பகுதிகளில் உள்ள மதத் தலைவர்களுடன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் இணைந்து செயல்பட்டு, வழிபாட்டுத் தலங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் துணை பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு.வூட்லர் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply