32
நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு துரித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்,கூட்டுறவு பிரதியமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்தார்.
நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்டத்தில் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளது.குறித்த இடர் பாடுகளில் இருந்து மாவட்டத்தையும் மக்களையும் மீள கட்டி யெழுப்புவது குறித்து விசேட கலந்துரையாடல் இன்று புதன்கிழமை (10) மாலை 2 மணி அளவில் மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்,கூட்டுறவு பிரதியமைச்சருமான உபாலி சமரசிங்க தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது மன்னார் மாவட்டத்தில் மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்
இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அசாதாரண காலநிலை க்கு முன்னர் மன்னார் மாவட்டத்தில் 35 ஆயிரம் ஏக்கர் நெற் செய்கை பயிரிடப் பட்டிருந்தது.இதில் சுமார் 20 ஆயிரம் நெற்பயிர்ச் செய்கை அசாதாரண காலநிலை காரணமாக அழிவடைந்துள்ளன.எனவே குறித்த நிலத்தில் மீளவும் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ளுவதற்குறிய நடவடிக்கைகளை மேற்கொள்ள இழப்பீடுகளை வழங்குதல்,விதை நெல் மற்றும் பசளைகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பான அறிவுறுத்தல்கள் உரிய திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் அழிவடைந்த மாகாண,மத்திய,கமநல சேவை திணைக்களங்களுக்கு சொந்தமான குளங்களை தற்காலிகமாக புனரமைத்து நீரை தேக்கி வைப்பதற்கு ஏற்ற வகையில் உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டது.பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்த மக்கள் தற்போது சொந்த இடங்களுக்கு மீள திரும்பி வருகின்றனர்.
மேலும் மாவட்டத்தில் உயிரிழந்த கால்நடைகள் குறித்தும் அதற்கான இழப்பீடுகள் வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டதோடு,பதிவு செய்யப்பட்ட கால் நடையளர்களுக்கு மாத்திரமே இழப்பீடு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதும் பதிவு செய்யப்படாத கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்வதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அதிகாரிகள் மக்களின் பாதிப்புகள் குறித்த துல்லியமான தகவல்களை ஜனாதிபதியிடம் தெரிவிக்க வேண்டிய நிலை உள்ளது.
சகல விதமான பிரச்சனைகள் குறித்தும் உரிய அதிகாரிகளிடம் ஜனாதிபதி கேள்வி எழுப்பும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் உரிய முறையில் கிடைக்க வேண்டும்.எனவே அதிகாரிகள் சகல விதமான தரவுகளுடன் ஜனாதிபதியில் கலந்துரையாடலில் கலந்து கொண்டு துல்லியமான பதிலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் பிரதி அமைச்சர் முன் வைத்த மையும் குறிப்பிடத்தக்கது.
56
