உக்ரைனின் முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி (Andriy Parubiy )மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார்.
ஆண்ட்ரி பருபி (54) மீது மேற்கு நகரமான லிவிவ்வில் வைத்து இனந்தெரியாத நபர் ஒருவரினால் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த நபர் துப்பாக்கிச் சூட்டினை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், அவரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த தாக்குதல் மிகக் கொடூரமான சம்பவமாகும் என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி தெரிவித்ததுடன், பருபியின் குடும்பத்தினருக்கு இரங்கலும் தெரிவித்தார்.
உக்ரைனின் வெகுஜன போராட்டங்களின் போது முக்கியத்துவம் பெற்ற பருபி, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நெருங்கிய உறவுகளை ஆதரித்ததோடு, 2014 இல் ரஷ்ய சார்பு முன்னாள் ஜனாதிபதி விக்டர் யானுகோவிச்சை பதவி விலகச் செய்ய வழிவகுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.