மலேசியாவில் நடைபெற்ற தமிழ் வல்லுனர்களின் பொருளாதார மாநாட்டில் பினாங்கு மாநில முதலமைச்சர் சோவ் கோன் யோவ்வின் (Chow Kon Yeow) விசேட அழைப்பின் பேரில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
கடந்த 2020ஆம் ஆண்டின் பின்னர் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் போது இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், இந்திய மத்திய அரசும் மற்றும் தமிழக மாநில அரசுகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு இலங்கைக்கு பல்வேறு சமூக, பொருளாதார உதவிகளை பெற்றுக்கொடுத்திருந்தார்.
இந்திய மத்திய அரசுடன் கலந்துரையாடி சுமார் ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான உணவுப்பொருட்களை பெற்றுக்கொடுத்தமை, தமிழக அரசிடம் இருந்து 40 இலட்சம் குடும்பங்களுக்கு 10 கிலோ வீதம் அரிசியை பெற்றுக் கொடுத்தமை, இலங்கையில் பின்தங்கிய பிரதேசத்தை சேர்ந்த வைத்தியசாலைக்கு இலவச மருந்துகள், கர்ப்பிணி தாய்மார்கள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 500 மெட்ரிக் தொன் பால்மாவை பெற்றுக் கொடுத்தமை, இந்தியாவில் இருந்து எரிப்பொருளை குழாய் வழியாக கொண்டுவரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியமை, இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைத்து அதனூடாக சுற்றுலாத்துறை மேம்படுத்துதல் போன்ற வேலைத்திட்டங்களை சமூக நலன்கருதி முன்னெடுக்க பங்களிப்பு வழங்கியதன் பிரகாரம் இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள செந்தில் தொண்டமானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.











The post மலேசிய தமிழ் வல்லுனர் பொருளாதார மாநாட்டில் சிறப்பு விருந்தினராக செந்தில் தொண்டமான் பங்கேற்றார்! appeared first on LNW Tamil.