மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்காக பணியாற்றுவதில்லை. மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கதைப்பதும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார்.
ஹட்டனில் நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது,
மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்காக பணியாற்றுவதில்லை. மக்களின் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கதைப்பதும் இல்லை. திகாம்பரம் போன்றோம் மக்களுக்காக சேவை செய்ய வேண்டும்.
2006 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் நான் இங்கு பணியாற்றிய போது, ஹட்டன் ஓரளவு சுத்தமாக இருந்தது. தற்போது குப்பைகள் நிறைந்த நகரமாக உள்ளது. இதுகுறித்து அங்குள்ள அரசியல்வாதிகள் பேசுவதில்லை.
எதிர்காலத்தில் நான் மலையக மக்களுக்காக பல சேவைகளை செய்ய எதிர்பார்த்துள்ளேன் எனவும் அவர் கூறினார்.