மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் உயிரிழப்பு: அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் | Woman dies after falling into rainwater drainage ditch

சென்னை: சென்​னை​யில் மூடப்​ப​டா​மல் இருந்த மழைநீர் வடி​கால் பள்​ளத்​தில் தவறி விழுந்து பெண் ஒரு​வர் உயி​ரிழந்​தார். இந்த இறப்​புக்கு அதி​காரி​களின் கவனக்​குறைவே காரணம் எனக்​கூறி பொது​மக்​கள் போராட்​டம் நடத்​தினர்.

சென்னை மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட பகு​தி​களில் மழைநீர் வடி​கால் பணி ஆங்​காங்கே நடை​பெற்று வரு​கிறது. சூளைமேடு காவல் நிலைய எல்​லைக்கு உட்​பட்ட சென்னை மாநக​ராட்சி மண்​டலம் 8, வார்டு 106-க்கு உட்​பட்ட வீர​பாண்டி நகர் முதல் தெரு​வில் மழைநீர் வடி​கால் பள்ளம் சரி​யாக மூடப்​ப​டா​மல் இருந்​த​தாக கூறப்​படு​கிறது.

நேற்று முன்​தினம் இரவு அந்த வழி​யாக வந்த தீபா (42) என்ற பெண் எதிர்​பா​ராத வித​மாக அதில் தவறி விழுந்து இறந்​துள்​ளார். இரவு நேரம் என்​ப​தால் அவர் பள்​ளத்​தில் விழுந்​ததை யாரும் பார்க்​க​வில்​லை.

நேற்று காலை அந்த வழி​யாகச் சென்ற பொது​மக்​கள் இதைப் பார்த்து காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு தகவல் தெரி​வித்​தனர். உடனே சூளைமேடு காவல் நிலைய உதவி ஆய்​வாளர் ராஜேந்​திரன் தலை​மையி​லான போலீ​ஸார் சம்பவ இடம் விரைந்​து, தீயணைப்​புப் படை வீரர்​கள் உதவி​யுடன் கயிறு கட்டி சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்​காக கீழ்ப்​பாக்​கம் அரசு மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்.

இது தொடர்​பாக சூளைமேடு போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர். சம்​பந்​தப்​பட்ட பெண் மழைநீர் வடி​கால் பள்​ளத்​தில் தவறி விழுந்​த​தில் தலை மற்​றும் முகத்​தில் அடிபட்​டும், பள்​ளத்​தில் இருந்த தண்​ணீரில் மூழ்​கி​யும் உயி​ரிழந்​திருக்க வாய்ப்​புள்​ள​தாக போலீ​ஸார் தெரி​வித்​தனர். மேலும் யாராவது கொலை செய்து பள்​ளத்​தில் வீசி​னார்​களா என்​பது குறித்து விசா​ரித்து வரு​கின்​றனர்.

இது ஒரு​புறம் இருக்க பெண்​ணின் இறப்​புக்கு அதி​காரி​களின் கவனக்​குறைவே காரணம் என குற்​றஞ்​சாட்டி அப்​பகுதி பொதுமக்கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். தகவலறிந்து நிகழ்​விடம் சென்ற அதி​காரி​கள் உரிய நடவடிக்கை எடுப்​ப​தாக உறுதி அளித்​ததையடுத்​து பொது​மக்​கள்​ கலைந்​து சென்​றனர்​.

நன்றி

Leave a Reply