மாத்தளை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம்!! 400 உடனடியாக வெளியேற எச்சரிக்கை

மாத்தளை மாவட்டத்தில் உள்ள சுமார் 400 குடும்பங்களுக்கு மண் சரிவு மற்றும் பாறைகள் சரியும் அபாயம் இருப்பதால், அவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பு இன்று புதிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

தேசிய கட்டிடம் மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் மாத்தளை மாவட்டத் தலைவர் சமிந்த மோரேமட கருத்து தெரிவிக்கையில், பலத்த காற்று மற்றும் கனமழையின் காரணமாக 400க்கும் மேற்பட்ட ஆபத்தான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

குறிப்பாக, மாத்தளை நகரத்தை நோக்கிய Dodandeniya மலையில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளதாகவும், பாறைகள் விழும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், Ambokka, Wulugala, Hunugala மற்றும் Rawanakanda மலைத்தொடர்களும் புவியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வருவதாக அவர் கூறினார்

நன்றி

Leave a Reply