மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம்- எரிசக்தி அமைச்சர் இடையில் சந்திப்பு!

இலங்கை மின்சார சபையின் பொறியாளர்கள் சங்கம், நேற்று (11) எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜெயக்கொடியை சந்தித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு செயல்முறைக்கு எதிராக, சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அந்த தொழிற்சங்கம் நேற்று இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தன.

மின்சார சபையின் மறுசீரமைப்பின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட நான்கு நிறுவனங்களின் தலைவர்களும் இதன்போது பங்கேற்றிருந்தனர்.

இதன்போது, புதிய பணிகளை எவ்வாறு மேற்கொள்வது? ஊழியர்கள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படுவார்கள்? புதிய பணிப்பாளர்களின் பொறுப்புகள் என்ன? என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி

Leave a Reply