மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து! – Athavan News

இலங்கை மின்சார சபையின் (CEB) அனைத்து ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு மறு அறிவிப்பு வரும் வரை அமுலில் இருக்கும் என்று CEB பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

மின்சார விநியோகத்துடன் தொடர்புடைய அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய பொது சேவைகளாக அறிவிக்கும் ஒரு அசாதாரண வர்த்தமானி அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டார்.

மின்சார விநியோகத்தில் ஈடுபட்டுள்ள எந்தவொரு பொது நிறுவனம், அரசுத் துறை, உள்ளூராட்சி அமைப்பு அல்லது கூட்டுறவு சங்கத்தால் வழங்கப்படும் சேவைகள் தடைபடவோ அல்லது குறுக்கிடவோ வாய்ப்புள்ளது.

இதனால் அறிவிப்பு அவசியமாகும் என்று ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் மூலம், மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய பொது சேவைகளாகக் கருதப்படுகின்றன.

நன்றி

Leave a Reply