மியன்மார் பொதுத் தேர்தல் டிசம்பர் ஆரம்பம்! – Athavan News

மியன்மார் தனது பொதுத் தேர்தலை எதிர்வரும் டிசம்பர் 28 ஆம் திகதி தொடங்கும் என்று அதன் இராணுவ அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரசு தொலைக்காட்சி திங்களன்று (18) வெளியிட்ட செய்தியில், தேர்தல் மூன்று தனித்தனி நாட்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

முதல் கட்ட தேர்தல் டிசம்பர் 28 ஆம் திகதி நடைபெறும், அடுத்த இரண்டு கட்ட தேர்தல்கள் ஜனவரி மாதத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்போது, நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 55 கட்சிகள் தேர்தலுக்குப் பதிவு செய்துள்ளதாக திங்களன்று அரச ஊடகங்கள் தெரிவித்தன.

அவற்றில் ஒன்பது கட்சிகள் நாடு தழுவிய இடங்களுக்குப் போட்டியிடத் திட்டமிட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் இராணுவ ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி, ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகியை சிறையில் அடைத்ததிலிருந்து நடைபெறும் முதல் வாக்கெடுப்பு இதுவாகும்.

மியான்மர் ஒரு உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ளது.

இராணுவத்திற்கும் இன ஆயுதக் குழுக்களுக்கும் இடையே கொடிய மோதல்கள் அரங்கேறி வருகின்றன.

வன்முறை பகுதிகளில் சிக்கியுள்ள பலர் வாக்களிக்க அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.

நன்றி

Leave a Reply