இலங்கை அணியின் முன்னாள் துடுப்பாட்ட ஜாம்பவான் குமார் சங்கக்கார, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் பெறுப்பேற்கவுள்ளார்.
ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகியதன் பின்னணியில் இந்த முன்னேற்றம் அமைந்துள்ளது.
மேலும், 2026 இந்தியன் பிரீமியர் லீக் சீசனுக்கான திட்டமிடலை சங்கக்கார ஏற்கனவே தொடங்கியுள்ளார்.
ராஜஸ்தான் ரோயல்ஸுடனான சங்கக்காரவின் தொடர்பு நீண்டகாலமானது மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது.
அணியில் இணைந்ததிலிருந்து, அவர் இயக்குனர் மற்றும் தலைமை பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.
அவர், சஞ்சு சாம்சன் தலைமையிலான அணியை நான்கு சீசன்களில் இரண்டு பிளேஆஃப்களுக்கு அழைத்துச் சென்றார்.
அவரது வழிகாட்டுதலின் கீழ், 2008 ஆம் ஆண்டு தொடக்க பட்டத்திற்குப் பின்னர் முதல் முறையாக ராஜஸ்தான் அணியானது, 2022 ஐபிஎல் சீசனில் இறுதிப் போட்டியை எட்டியது.
அந்தப் போட்டியில் அவர்கள் குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவினர்.
2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் ராஜஸ்தான் அணிக்கு தலைவராக இருந்த டிராவிட், பின்னர் 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் ஆலோசகராகப் பொறுப்பேற்றார்.
அவர் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இந்தியாவை 2024 டி:20 உலகக் கிண்ணப் பட்டத்தை வெல்ல வழிநடத்திய உடனேயே, ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.