தென்கிழக்கு ஐரோப்பிய நாடான பொஸ்னியாவின் ஹெர்சகோவினாவில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பொஸ்னியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள துஸ்லா நகரத்தில் அமைந்துள்ள முதியோர் காப்பகத்தின் ஏழாவது தளத்தில், நேற்று முன்தினம் இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்த போதும் தீ வேகமாகப் பரவியதால் 11 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. .
மேலும் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப்பணியில் ஈடுபட்டவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
The post முதியோர் காப்பகத்தில் தீவிபத்து – 11 போ் பலி appeared first on Global Tamil News.
