முல்லைத்தீவு முத்தையன் கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டமை மற்றும் காணாமல் போன இளைஞன் முத்தையன் கட்டு குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டமை தொடா்பில் முல்லைத்தீவு காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் 5 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
முத்தையன்கட்டு குளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்டு தாக்குதல் நடாத்தியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போன நிலையில் இன்று காலை (09.08.25) அவா் முத்தையன்கட்டு குளத்தில் சடலமாக மிதந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளாா்
இது தொடா்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதனையடுத்து சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு காவல்துறையினரால் 5 இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது