ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர் அந்தத் தண்டனைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீடுகளை மார்ச் மாதம் 09 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இந்த மேன்முறையீட்டு மனுக்கள் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டன. இதன்போது முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம், குறித்த மேன்முறையீட்டு […]
