96
முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ (Andrew Mountbatten-Windsor) சுமார் 11 மணிநேர காவல்துறை விசாரணைகளின் பின்னா் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் (Bail) விடுதலை செய்யப்பட்டுள்ளார். லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தில் (Westminster Magistrates’ Court) நடைபெற்ற அவசர விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கினாலும், அவர் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்கக் கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளது.
ஆண்ட்ரூ தனது கடவுச்சீட்டை (Passport) உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதுடன் அவர் பிரித்தானியாவை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.அவர் தனது வசிப்பிடமான விண்ட்சரில் உள்ள ரோயல் லாட்ஜிலேயே (Royal Lodge) தங்கியிருக்க வேண்டும் எனவும் தினமும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் கையொப்பமிட வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகள் அல்லது பாதிக்கப்பட்ட எவரையும் அவர் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.ஒரு பாரிய தொகை பிணைப் பிணையாக (Bail Bond) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, அரச தரப்பு சட்டத்தரணிகள் (Prosecution), ஆண்ட்ரூவிடம் உள்ள செல்வாக்கை வைத்து சாட்சிகளைக் கலைக்கக்கூடும் என வாதிட்டு பிணை வழங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும், அவரது சட்டத்தரணிகள், “அவர் ஒரு உலகறிந்த நபர், அவரால் எங்கும் ஒளிந்து கொள்ள முடியாது” என வாதிட்டு பிணையைப் பெற்றுக்கொண்டனர். இந்த வழக்கின் அடுத்த பிரதான விசாரணை 2026 மார்ச் மாதம் நடைபெறும் எனத் திகதி குறிக்கப்பட்டுள்ளது. அதுவரை அவர் காவல்துறையினரின் தீவிர கண்காணிப்பில் இருப்பார்.
அவர் மீது இன்னும் உத்தியோகபூர்வமாக குற்றப்பத்திரிகை (Charge sheet) தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால், “பொது அலுவலகத்தில் தவறான நடத்தை” (Misconduct in Public Office) என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை தொடர்கிறது.
Tag Words:
#PrinceAndrew #BailNews #RoyalScandal #UKCourt #JusticeWatch #BuckinghamPalace #LegalUpdate #LKA
