இங்கிலாந்து கால்பந்து ஜாம்பவான் டேவிட் பெக்காமுக்கு செவ்வாயன்று (04) வின்ட்சர் கோட்டையில் மன்னர் மூன்றாம் சார்லஸினால் நைட் (knighted) பட்டம் வழங்கப்பட்டது.
இது “பெருமைமிக்க தருணம்” என்று கால்பந்து ஜாம்பவான் கூறினார்.
50 வயதான பெக்காம், கால்பந்து, பிரித்தானிய சமூகத்திற்கான அவரது சேவைகளுக்காகவும், அவரது நீண்டகால தொண்டு பணிகளுக்காகவும் இந்த கௌரவத்தைப் பெற்றார்.
1992 ஆம் ஆண்டு 17 வயதில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக அறிமுகமான பெக்காம், ஓல்ட் டிராஃபோர்டில் இருந்த காலத்தில் ஆறு பிரீமியர் லீக் பட்டங்கள், இரண்டு FA கிண்ணம், இரண்டு முறை FA அறக்கட்டளை கிண்ணம் மற்றும் 1999 UEFA சாம்பியன்ஸ் லீக்கை வென்றார். பின்னர் அவர் ரியல் மாட்ரிட்டில் சேர்ந்தார், அங்கு அவர் அமெரிக்காவிற்குச் செல்வதற்கு முன்பு தனது இறுதி சீசனில் லா லிகாவை வென்றார்.
சர்வதேச அரங்கில், பெக்காம் 1996 செப்டம்பர் 1, அன்று தனது 21 வயதில் இங்கிலாந்தில் அறிமுகமானார்.
மேலும் 115 போட்டிகளில் வெற்றி பெற்றார், ஆறு ஆண்டுகள் தலைவராக பணியாற்றினார்.
