மூன்றாவது முறையாக தான் அமெரிக்க ஜனாதிபதி ஆவதை அமெரிக்க சட்டம் தடை செய்வது மிகவும் மோசமானது என்று ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
ட்ரம்ப், மீண்டும் ஒருமுறை அமெரிக்க ஜனாதிபதியாக வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், அவர் அதை மிகவும் விரும்புவதாகவும் தகவல்கள் வெளியாகின.
அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் 22ஆவது திருத்தத்தின்படி யாரும் 3ஆவது முறையாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட முடியாது என்று தெளிவாக கூறுகிறது.
அதாவது ஒருவரை இரு தடவைக்கு மேல் ஜனாதிபதியாக தேர்வு செய்ய முடியாது என்பது இதன் பொருளாகும்.
