கடந்த வருடம் டிசம்பர் மாதம் கடல் வழியாக வந்த 116 ரோஹிங்கியா அகதிகள் முல்லைத்தீவில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து இலங்கைக்கான ஐ.நா. வதிவிட பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிராஞ்ச் கவலை தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அந்தக் குழுவை மீட்டு மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக இலங்கை மற்றும் கடற்படையை அவர் பாராட்டியுள்ளார்.
ஐ.நா. அகதிகள் முகவரகம் (UNHCR) ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களின்படி பதிவு செய்வதைத் தொடர அனுமதிக்குமாறு அவர் அதிகாரிகளுக்க வலியுறுத்தியதுடன் இதன் மூலம் அவர்களின் விடுதலை சாத்தியமாகிறது என்றும் குறிப்பிட்டார்.
மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து பெருமளவில் இடம்பெயர்ந்த ரோஹிங்கியா சமூகங்களின் மோசமான நிலையைக் குறிப்பிட்டு, நீண்டகாலமாக தடுத்து வைக்கப்படுவது மனித உரிமைகளை மீறுவதாகவும், நீடித்த தீர்வுகளுக்கு இடையூறாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.