22 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் 17 பேர் நேரடியாகவும் 5 பேர் தேசியப் பட்டியல் ஊடாகவும் பாராளுமன்றம் நுழைந்தவர்கள். கடந்த நவம்பர் முதல் மே மாதம் வரையிலான காலப்பகுதியில் 55 பாராளுமன்ற சபை அமர்வுகள் இடம்பெற்றுள்ளன. இதில் சில முக்கியமான சட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன. குறித்த சபை அமர்வுகளுக்கு பாராளுமன்றத்திற்கு மாவட்ட விருப்பு வாக்கு அடிப்படையில் நேரடியாக தெரிவான முஸ்லிம் உறுப்பினர்கள் மற்றும் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவான முஸ்லிம்களின் வரவுப் பதிவுகள் குறித்து இலங்கை பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டவை.
இவர்களில் நேரடியாக தெரிவான 17 பேர் உட்பட தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஒருவருமாக 18 பேர் முதல் அமர்வு தொடக்கம் அனைத்து அமர்வுகளின்போதும் எம்.பி.க்களாக இருந்தனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் முஹம்மத் சாலி நளீம் கடந்த மார்ச் மாதம் எம்.பி. பதவியிலிருந்து இராஜினாமா செய்திருந்தார். இவர் தவிர ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஊடாக தெரிவான மு.கா. உறுப்பினர் மற்றும் அ.இ.ம.கா. உறுப்பினர் மற்றும் புதிய ஜனநாயக முன்னணி ஊடாக தெரிவான உறுப்பினர் ஆகியோர் முதல் ஐந்து அமர்வுகளின் போதும் எம்.பி.யாக பதவி வகிக்கவில்லை. எனவே, இவர்களின் மொத்த பாராளுமன்ற நாட்களின் தொகையில் மாற்றங்கள் இருக்கின்றன.
உதவி – விடிவெள்ளி