மூளைக் காயத்தால் ஜப்பானிய குத்துச் சண்டை வீரர்கள் மரணம்!

ஆகஸ்ட் 2 ஆம் திகதி யோஜி சைட்டோவுடனான தனது மோதலின் எட்டாவது சுற்றில் நாக் அவுட் மூலம் தோற்கடிக்கப்பட்ட 28 வயதான ஜப்பானிய குத்துச் சண்டை வீரர் ஹிரோமாசா உரகாவா சனிக்கிழமை (09) உயிரிழந்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை டோக்கியோவின் கோரகுயென் ஹாலில் நடந்த போட்டியின் போது மூளையில் ஏற்பட்ட காயங்களால் ஷிகெடோஷி கோட்டாரி இறந்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இரண்டு குத்துச்சண்டை வீரர்களும் போட்டியின் போது மூளையில் ஏற்பட்ட காயங்களுக்கு சப்ட்யூரல் ஹீமாடோமாவுக்கு அறுவை சிகிச்சை செய்தனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக ஜப்பானிய குத்துச் சண்டை ஆணையகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

மேலும், இறப்புகள் குறித்து விவாதிக்க செப்டம்பரில் ஒரு கூட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.

(மூளையைச் சுற்றியுள்ள திசுக்களின் அடுக்குகளுக்கு இடையில் இரத்தம் சேரும்போது சப்ட்யூரல் ஹீமாடோமா என்ற ஒரு தீவிரமான மருத்துவ நிலை ஏற்படுகிறது. இந்த நிலை தலையில் ஏற்படும் அதிர்ச்சிகரமான காயத்தினாலோ அல்லது சில மருத்துவ நிலைமைகளின் விளைவாகவோ ஏற்படலாம்)

நன்றி

Leave a Reply