டேட் மாடர்ன் கட்டிடத்தின் 10வது மாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ஒரு சிறுவன் ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் , ஓடவும், சைக்கிள் ஓட்டவும், குதிக்கவும், நீந்தவும் ஆரம்பித்துள்ளதாக சிறுவனின் குடும்பத்தினர் மகிழ்சி தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர் ஒருவரால் தாக்குதலின் போது ஆறு வயதாக இருந்த சிறுவன் 100 அடி உயரத்தில் இருந்து விழுந்ததில் மூளையில் இரத்தப்போக்கு மற்றும் எலும்பு முறிவு உள்ளிட்ட காயங்களுக்கு உள்ளாகி 6 ஆண்டுகள் சிகிச்சையில் இருந்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு அவர்களது தங்குமிடத்தில் வசித்துவந்த ஆட்டிசம் கொண்ட இளைஞன் ஒருவர் குறித்த சிறுவனை தாக்கி 10 வைத்து மாடியிலிருந்து தள்ளிவிட்டுள்ளார்.
இதனால் குறித்த இளைஞன் 2020 ஆம் ஆண்டு கொலை முயற்சி குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு 15 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார்.
தாக்குதலில் காயமடைந்த குறித்த சிறுவன் பல மாதங்கள் தீவிர சிகிச்சையில் இருந்து , தற்போது முன்னேறியுள்ளது அவனது குடும்பத்தினரையும் நிபுணர்களையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
