மெக்சிக்கோ மாகாணத்தில் கனமழையில் சிக்கி 64 பேர் உயிரிழப்பு!

மெக்சிக்கோ மாநிலங்களில் கடந்த வாரம் பல நாட்களாக பெய்த கனமழையால் பல தெருக்கள் , சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன் நிலச்சரிவுகளும் ஏற்பட்டன.

இந்த அனர்த்தங்களில் 64 பேர் உரிழந்துள்ளதுடன் 65 பேர் காணாமல் போயுள்ளனர் மேலும் 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

பசுபிக் கடலில் உருவாகிய ‘ரேமண்ட்’ புயல் காரணமாக மெக்சிக்கோவின் 32 மாகாணங்களில் பெய்த தொடர் கனமழையினால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளும் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ளன.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மழை வெள்ளத்தில் சிக்கி காணாமல் போன 65 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இராணுவம், விமானப்படை மற்றும் தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 5,400க்கும் மேற்பட்ட வீரர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி

Leave a Reply