மேர்வின் சில்வாவுக்கு எதிரான வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா அமைச்சராக செயற்பட்ட காலத்தில் சட்ட விரோதமாக சொத்துக்களை சேர்த்ததாக கூறி, அவருக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.

இதன்படி, இந்த வழக்கின் விசாரணையை எதிர்வரும் நவம்பர் 17 ஆம் திகதி முன்னெடுப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹால் உத்தரவிட்டுள்ளார்.

வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​வழக்கு தொடர்பான பல ஆவணங்களை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு பிரதிவாதிக்கு வழங்கியது.

இதன்படி, வழக்கின் விசாரணைக்கு திகதி நிர்ணயிக்குமாறு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்தைக் கோரியது.

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை நவம்பர் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதற்கு தீர்மானித்தார்.

2010 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவர் அமைச்சராகப் பணியாற்றியபோது தனது சட்டப்பூர்வ வருமானத்திற்கு மேலதிகமாக சுமார் 150 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோதமாகச் சம்பாதித்துள்ளதாக மேர்வின் சில்வாவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply