யாழில். இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல்!

யாழ்ப்பாணத்தில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல் நடத்தியதில், இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மானிப்பாய் கட்டுடை பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாலை இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை, முச்சக்கர வண்டியில் பின் தொடர்ந்து சென்ற மூவர் அடங்கிய வன்முறை கும்பல் , இளைஞனை வழிமறித்து வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞனை வீதியில் சென்றவர்கள் மீட்டு,  சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

The post யாழில். இளைஞன் மீது வன்முறை கும்பல் வாள் வெட்டு தாக்குதல்! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply