யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை

 

யாழ்ப்பாணத்திற்கு நாளைய தினம் வியாழக்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் எடுத்து வரப்படவுள்ளது.  யாழ்ப்பாணத்தில் கடந்த 5 நாட்களுக்கு மேலாக பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலையில், இன்றைய தினம் புதன்கிழமையும் சுமார் 3 இலட்சம் லீட்டர் பெட்ரோல் கொலன்னாவலையில் இருந்து எடுத்து வரப்பட்ட போதிலும் , இன்றைய தினமும் நீண்ட வரிசை காணப்பட்டது.

இந்நிலையில் நாளைய தினம் வியாழக்கிழமையும் 2 இலட்சத்து, 90 ஆயிரத்து 400 லிட்டர் பெட்ரோல் எடுத்து வரப்பட்டு, யாழ்ப்பாணத்தில் உள்ள பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் 36 எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக விநியோகிக்கப்படவுள்ளதாக மாவட்ட செயலர் அறிவித்துள்ளாா்
#JaffnaFuelUpdate #PetrolSupply #Ceypetco #DistrictSecretary #JaffnaDaily #FuelQueue

The post யாழுக்கு நாளையும் 3 இலட்சம் பெட்ரோல் விநியோகிக்க நடவடிக்கை appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply