யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் தேர் திருவிழா

வரலாற்று சிறப்புமிக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.

கடந்த 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவம் சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில் இன்றைய தினம் காலை இடம்பெற்றது.

காலை இடம்பெற்ற பூஜை வழிபாடுகளை தொடர்ந்து உள்வீதியுலா வந்த துர்க்கை அம்மன் , தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , வெளிவீதியுலா வந்தார்

நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்சவம் நடைபெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெறவுள்ளது.

நன்றி

Leave a Reply