யாழ் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரம் இந்து மயான அபிவிருத்தி பணிகள்!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட மாவிட்டபுரம் இந்து மயானத்தை அபிவிருத்தி செய்வதற்கான முதற்கட்ட பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது

முதற்கட்டமாக மயான முகப்பு வளைவு மற்றும் இளைப்பாறு மண்டபம் ஆகியவற்றிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு வலிகாமம் வடக்கு பிரதேசசபை தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் வலி வடக்கு பிரதேசசபை செயலாளர் சி.சிவானந்தன், வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர்.உதயசங்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர்.உதயசங்கரின் ஏற்பாட்டில் மாவை பாரதி சனசமூக நிலையத்தின் ஒழுங்கமைப்பில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply