இங்கிலாந்தின் ( Aston Villa)ஆஸ்டன் வில்லா மற்றும் மக்காபி டெல் அவிவ் ( Maccabi Tel Aviv) அணிகளுக்கு இடையேயான யூரோபா லீக் (Europa League ) போட்டிக்கு 700க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுதப்பட உள்ளனர்.
பாலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய குழுக்களால் வெளியே ஏதேனும் பதற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்படும் நிலையில் இஸ்ரேலிய கால்பந்து அணியான மக்காபி டெல் அவிவ் அணியின் தலைமை நிர்வாகி , தங்கள் ஆதரவாளர்கள் குறித்து “பொய்யான தகவல்கள்” பரப்படுவதாகவும் அதனை கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் இஸ்ரேல் ஆதரவாளர்கள் ஆஸ்டன் வில்லாவில் இருந்து தடை செய்யப்பட்டதுடன் ரசிகர்களிடையே இனவெறியை ஒழிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறான சூழ்நிலையில் போட்டியில் பதற்றங்கள் ஏற்படாமல் இருக்க சுமார் 700 க்கும் மேற்பட்ட பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
