ரணிலுக்கு ஆதரவாக பலர் களத்தில் – LNW Tamil

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக அரசியல்வாதிகள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வஜிர அபேவர்தன, சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம், நிமல் லான்சா. நிஷாந்த வர்ணசிங்க, லசந்த அழகியவண்ண, மஹிந்த அமரவீர, நாமல் ராஜபக்ஷ, ருவான் விஜேவர்தன, தினேஷ் குணவர்தன மற்றும் பல அரசியல்வாதிகள் தற்போது நீதிமன்ற வளாகத்தில் உள்ளனர்.

நீதிமன்ற வளாகத்தில் சிறிது நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நன்றி

Leave a Reply