ரணிலுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சிப்பது குறித்து எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை விமர்சிப்பது தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் சட்டத்தரணிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த அமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (24) விசேட ஊடக சந்திப்பை நடத்தி இதனை அறிவித்தது.

நாடாளுமன்றத்துக்கு வெளியே இந்த உத்தரவை விமர்சிக்கும் வகையில் அறிக்கைகள் வெளியிடப்பட்டால், அது நீதிமன்ற அவமதிப்புக்கு சமமாகிவிடும் என்று சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

மேலும் இவ்வாறான அறிக்கைகள் பொதுமக்களிடையே அமையின்மையை ஏற்படுத்தினால், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கப்படாமல் இருப்பதற்கு அது ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றி

Leave a Reply