ரணிலுக்கு பிணை வழங்க, சட்ட மா அதிபர் திணைக்களம் கடும் எதிர்ப்பு


ரணிலுக்கு பிணை வழங்குவதை சட்ட மா அதிபர் திணைக்களம் கடுமையாக ஆட்சேபிக்கிறது. 

CID சார்பாக ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் பிரதிவாதிக்கு எதிராக சாட்சியங்களை முன்வைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் விசாரணை முழுமையடையாததால், பிரதிவாதியை காவலில் வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, நீதிமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்ததுடன் தமது கட்சிக்காரரை பிணையில் விடுவிக்குமாறு கோரினார்.

பிணை வழங்கப்பட்டதாக முன்னர் கூறப்பட்டாலும், அது தொடர்பான நீதிமன்ற இறுதித் தீர்ப்பு இன்னும் வரவில்லை

நன்றி

Leave a Reply