ரத்மலான அஞ்சுவின் வலையமைப்பைச் சேர்ந்த முக்கிய பெண் கைது.

வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவன் “ரத்மலான அஞ்சுவின்” போதைப்பொருள் விநியோக வலையமைப்பை  இலங்கையில் முகாமைத்துவம் செய்த பெண் ஒருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர்  கைது செய்துள்ளனர்.  காவல்துறை விசேட அதிரடிப்படையின் விசேட நடவடிக்கைப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இப்பெண்  கைது செய்யப்பட்டார். இதன்போது அவரிடமிருந்து 11 கிராம் 520 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள், கொடுக்கல் வாங்கல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட கைபேசி ஒன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட பெண், வெளிநாட்டிலிருந்து ரத்மலான அஞ்சு வழங்கும் உத்தரவுகளுக்கு அமைய இலங்கையினுள் போதைப்பொருள் விநியோகத்தை ஒருங்கிணைத்து வந்ததாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கைபேசியை ஆய்வு செய்வதன் மூலம் இந்த வலையமைப்பின் ஏனைய உறுப்பினர்களைக் கண்டறிய காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். சந்தேகநபர் தற்போது மேலதிக விசாரணைகளுக்காக காவல்துறைதடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

#STFSriLanka #DrugTrafficking #CrimeNewsSL #NarcoticsBust #கொழும்பு #பாதாளஉலகம் Rathmalana_Anju_Drug_Network #Female_Drug_Dealer_Arrested #Heroin_Seizure_Colombo #SriLanka_Police_STF

நன்றி

Leave a Reply