கடந்த சனிக்கிழமை மாலை 6.25 மணிக்கு ( Doncaster ) டான்காஸ்டரிலிருந்து லண்டன் கிங்ஸ் கிராஸுக்குச் (London King’s Cross.) செல்லும் LNER ரயில் சேவையில் நடந்த கத்திக்குத்துத் தாக்குதலின் போது பயணிகளைப் பாதுகாக்க முயன்ற 48 வயதான (Samir Zitouni) சமீர் ஜிடோனி எனும் நபர் காயமடைந்து தீவிர சிகிச்சையில் இருந்துவருகிறார்.
குறித்த கத்திக்குத்து சம்பவத்தின் போது துணிச்சலாக தலையிட்ட குறித்த நபர் LNER ரயில் சேவையின் தொழிலாளி ஆவர்.
இவரின் இந்த “அசாதாரண துணிச்சலை” LNER நிறுவனம் பாராட்டியுள்ளது.
சாம் என்றும் அழைக்கப்படும் 48 வயதான (Samir Zitouni) சமீர் ஜிடோனி, கடந்த சனிக்கிழமை இரவு பரபரப்பான ரயிலில் பயணிகளைக் குறிவைத்து நபர் ஒருவர் மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலை தடுக்க முயன்ற நிலையில் அவரும் காயமடைந்தார்.
குறித்த நபர் மக்கள் உயிரை பாதுகாக்க பெரும் பாடுபட்டதாகவும் அவரது செயல் மிகவும் வீரமிக்கது எனவும்
பிரித்தானிய போக்குவரத்து காவல்துறையின் (BTP) துணைத் தலைமைக் காவலர் (Stuart Cundy ) ஸ்டூவர்ட் கண்டி பாராட்டியுள்ளார்.
இந்நிலையில் காயமடைந்து தீவிர சிகிச்சையில் இருக்கும் சமீர் ஜிடோனி விரைவில் குணமடைய வேண்டும் என அவரால் பாதுகாக்கப்பட்ட மக்களும் அவரது நிர்வாகமும் சகா ஊழியர்களும் பிராத்தித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
