ரயில் பயணயச்சீட்டு முன்பதிவு தொடர்பான அறிவிப்பு!

ரயில் பயணயச்சீட்டு முன்பதிவுகளுக்கு கட்டாய அடையாள சரிபார்ப்பு முறையை இலங்கை ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய முறையின்படி, அனைத்து இலங்கை பயணிகளும் பயணயச்சீட்டு முன்பதிவுகளுக்கு தங்கள் தேசிய அடையாள அட்டை (NIC) எண்ணை வழங்க வேண்டும்.

மேலும் வெளிநாட்டினர் ஒன்லைனில் அல்லது கருமபீடங்களில் ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்யும்போது தங்கள் கடவுச்சீட்டு எண்ணை வழங்க வேண்டும்.

அனைத்து வழித்தடங்களிலும் உள்ள இன்டர்சிட்டி, நீண்ட தூர மற்றும் பிரீமியம் ரயில் சேவைகளில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கு மட்டுமே இந்தக் கொள்கை பொருந்தும்.

அதே நேரத்தில் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு கொள்முதல்கள் இந்தத் தேவையால் பாதிக்கப்படாது.

புதிய அமைப்பு சட்டவிரோத பயணச்சீட்டு விற்பனை நடவடிக்கைகளை தடுக்கவும், குறிப்பாக கண்டி-எல்ல போன்ற பிரபலமான சுற்றுலா வழித்தடங்களில் விலைகளை உயர்த்தும் கறுப்புச் சந்தை விற்பனையை நிறுத்தவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply