ரஷ்ய நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பு: ரிலையன்ஸ் கச்சா எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதிக்க வாய்ப்பு | US sanctions Russian companies Reliance crude oil imports likely to affect

புதுடெல்லி: ரஷ்​யா​வின் இரண்டு பெரிய எண்​ணெய் நிறு​வனங்​கள் மீது அமெரிக்கா தடை​வி​தித்​துள்​ளது. இதனால், ரிலை​யன்ஸ் இண்​டஸ்ட்​ரீஸின் கச்சா எண்​ணெய் இறக்​குமதி பாதிக்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

ரஷ்​யா-உக்​ரைன் இடையே​யான போர் 3 ஆண்​டு​களைத் தொடர்ந்​தும் நீடித்து வரு​கிறது. அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் முயற்சி செய்​தும் போரை நிறுத்த இயல​வில்​லை. இந்த நிலை​யில், அமெரிக்க கரு​வூல துறை​யின் வெளி​நாட்டு சொத்து கட்​டுப்​பாட்டு அலு​வல​கம் (ஓஎப்​ஏசி), ரஷ்​யா​வின் முக்​கிய எண்​ணெய் நிறு​வனங்​களான ரோஸ்​நெப்ட் மற்​றும் லூகா​யில் மீது தடை ​வி​தித்​துள்​ளது. இந்த நிறு​வனங்​கள் உக்​ரைன் மீதான தாக்​குதலுக்கு நிதி அளித்து வரு​வ​தாக ட்ரம்ப் நிர்​வாகம் குற்​றம்​சாட்டி உள்​ளது.

இந்த இரு நிறு​வனங்​களும் சேர்ந்து ஒரு நாளைக்கு 3.1 மில்​லியன் பேரல் கச்சா எண்​ணெயை ஏற்​றுமதி செய்​கின்​றன. ரோஸ்​நெப்ட் நிறு​வனம் மட்​டும் உலகளா​விய அளவில் 6 சதவீதத்​தை​யும், ரஷ்ய எண்​ணெய் உற்​பத்​தி​யில் பாதி​யை​யும் கொண்​டுள்​ளது.

2022-ம் ஆண்டு உக்​ரைன் மீது தாக்​குதலை தொடங்​கிய​திலிருந்து ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் கொள்​முதலை மேற்​கத்​திய நாடு​கள் நிறுத்​திக்​கொண்​டுள்​ளன. அதே​நேரம், அதிக தள்​ளு​படிகளை பயன்​படுத்தி ரஷ்​யா​விட​மிருந்து அதி​கள​வில் கச்சா எண்​ணெயை இந்​தியா இறக்​குமதி செய்து வரு​கிறது.

ரஷ்ய கச்சா எண்​ணெயை இந்​திய தனி​யார் துறை நிறு​வனங்​களான ரிலை​யன்ஸ் இண்​டஸ்ட்​ரீஸ் மற்​றும் ரோஸ்​நெப்​டின் நயாரா எனர்ஜி ஆகிய இரண்டு நிறு​வனங்​களும் வாங்கி வரு​கின்​றன. இந்த தடை​வி​திப்​பால் இந்த இரு நிறு​வனங்​களின் கச்சா எண்​ணெய் இறக்​குமதி கடுமை​யாக பாதிக்​கப்​படும் சூழல் உரு​வாகி​யுள்​ளது.

அதே​நேரம், மத்​திய அரசுக்கு சொந்​த​மான சுத்​தி​கரிப்பு நிறு​வனங்​களான இந்​தி​யன் ஆயில் கார்ப்​பரேஷன் (ஐஓசி), பாரத் பெட்​ரோலி​யம் (பிபிசிஎல்), இந்​துஸ்​தான் பெட்​ரோலி​யம் (எச்​பிசிஎல்), மங்​களூர் சுத்​தி​கரிப்பு -பெட்​ரோகெமிக்​கல்ஸ் நிறு​வனம், எச்​பிசிஎல்​-மிட்​டல் எனர்ஜி (எச்​எம்​இஎல்) நிறு​வனங்​களும் ரஷ்​யா​வின் கச்சா எண்​ணெயை கொள்​முதல் செய்​கின்​றன.

ஆனால், அரசுக்கு சொந்​த​மான இந்த சுத்​தி​கரிப்பு நிறு​வனங்​கள் ரோஸ்​நெப்ட் அல்​லது லூகாயிலுடன் எந்த ஒப்​பந்​தத்​தை​யும் கொண்​டிருக்​க​வில்​லை.

நன்றி

Leave a Reply