TNUSRB Recruitment 2025: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) காலியாக உள்ள 3644 Constable Grade II, Jail Warder Grade II, Firemen பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைப் படித்து, 21.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் கல்வி தகுதி என்ன?, விண்ணப்பிப்பது எப்படி? வயது வரம்பு எவ்வளவு? என்பது உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.
TNUSRB Recruitment 2025
Description | Details |
வேலை பிரிவு | TN Govt Jobs 2025 தமிழ்நாடு அரசு வேலை 2025 |
துறைகள் | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) Tamil Nadu Uniformed Services Recruitment Board |
காலியிடங்கள் | 3644 |
பணி | Constable Grade II, Jail Warder Grade II, Firemen |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் மூலம் |
கடைசி தேதி | 21.09.2025 |
பணியிடம் | தமிழ்நாடு |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
https://www.tnusrb.tn.gov.in/ |
TNUSRB Recruitment 2025 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB), 2025 ஆம் ஆண்டுக்கான பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- காவலர் நிலை II (Constable Grade II): இந்தப் பணிக்கு 2833 காலியிடங்கள் உள்ளன.
- சிறைக்காவலர் நிலை II (Jail Warder Grade II): இந்தப் பணிக்கு 180 காலியிடங்கள் உள்ளன.
- தீயணைப்பாளர் (Firemen): இந்தப் பணிக்கு 631 காலியிடங்கள் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tamilnadu Police Recruitment 2025 கல்வித் தகுதி
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) வேலைவாய்ப்பு 2025 பதவிக்கு தேவையான கல்வித் தகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- காவலர் நிலை II (Constable Grade II): 10ம் வகுப்பு தேர்ச்சி.
- சிறைக்காவலர் நிலை II (Jail Warder Grade II): 10ம் வகுப்பு தேர்ச்சி.
- தீயணைப்பாளர் (Firemen): 10ம் வகுப்பு தேர்ச்சி.
Tamilnadu Police Recruitment 2025 வயது வரம்பு விவரங்கள்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- பொதுப் பிரிவினர் (OC): 18 முதல் 26 வயது வரை.
- பிற்படுத்தப்பட்டோர் (BC), பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) (BCM), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் (MBC/DNC): 18 முதல் 28 வயது வரை.
- ஆதி திராவிடர் (SC), ஆதி திராவிடர் (அருந்ததியர்) (SCA), பழங்குடியினர் (ST), மற்றும் திருநங்கைகள்: 18 முதல் 31 வயது வரை.
- ஆதரவற்ற விதவைகள்: 18 முதல் 37 வயது வரை.
- முன்னாள் ராணுவத்தினர்: 18 முதல் 47 வயது வரை.
Tamilnadu Police Recruitment 2025 சம்பள விவரங்கள்
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) நடத்தும் காவலர் நிலை II, சிறைக்காவலர் நிலை II மற்றும் தீயணைப்பாளர் பணிகளுக்கான சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- காவலர் நிலை II, சிறைக்காவலர் நிலை II, தீயணைப்பாளர்: இந்தப் பதவிகளுக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத ஊதியமாக Rs.18,200/- முதல் Rs.67,100/- வரை வழங்கப்படும். இந்த சம்பள வரம்பு, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- கூடுதல் படிகள்: அடிப்படை சம்பளத்துடன், அரசு விதிகளின்படி அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி மற்றும் பிற சலுகைகளும் வழங்கப்படும்.
Tamilnadu Police Recruitment 2025 தேர்வு செயல்முறை
தமிழ்நாடு அரசு காவல் துறை வேலைவாய்ப்பு 2025 பதவிக்கு தேர்வு செயல்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
- முதல்நிலை தேர்வு – தமிழ் மொழித் தகுதித் தேர்வு (Preliminary Exam)
- முதன்மைத் தேர்வு (Main Exam)
- சான்றிதழ் சரிபார்ப்பு (Certificate Verification)
- உடல் அளவீட்டு சோதனை (Physical Measurement Test)
- உடற்தகுதி தேர்வு (Endurance Test)
- உடல் திறன் சோதனை (Physical Efficiency Test)
- Final Provisional Select List
TNUSRB Recruitment 2025 முக்கிய தேதிகள்:
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் (TNUSRB) வேலைவாய்ப்பு 2025 தொடர்பான முக்கியத் தேதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 22.08.2025
- ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2025
- எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 09.11.2025
TNUSRB Recruitment 2025 எப்படி விண்ணப்பிப்பது:
தமிழ்நாடு அரசு காவல் துறை வேலைவாய்ப்பு 2025 பதவிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnusrb.tn.gov.in/ க்கு சென்று ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விரிவான அறிவிப்பை கவனமாக படித்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். 22.08.2025-ம் தேதி முதல் 21.09.2025 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இப்பணியிடங்களுக்கு ஆண்கள், பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முறையை அறிய, அதிகாரப்பூர்வ அறிவிப்பை படிக்கவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF | Click Here |
ஆன்லைன் விண்ணப்ப படிவம் | Click Here |
TNUSRB அதிகாரப்பூர்வ இணையதளம் | Click Here |