பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மக்களுக்காக சீனாவால் நன்கொடையாக வழங்கப்பட்ட சுமார் 400 மில்லியன் ரூபாய் பெறுமதியான மனிதாபிமான உதவித் தொகை, இன்று (08) காலை சீன சரக்கு விமானம் மூலம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு (BIA) கொண்டு வரப்பட்டது.
ஷாங்காயிலிருந்து புறப்பட்ட போயிங் 747-400 சரக்கு சரக்கு விமானம் இன்று காலை 10:47 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிவாரணப் பொருட்களில் 84,525 கிலோ கிராம் எடையுள்ள லைஃப் ஜாக்கெட்டுகள், கூடாரங்கள், போர்வைகள் மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகியவை அடங்கும்.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலகா, பாதுகாப்பு துணை அமைச்சர் அருண ஜெயசேகர மற்றும் இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் உள்ளிட்ட ஒரு பெரிய குழு உதவியைப் பெறுவதற்காக விமான நிலையத்திற்கு வந்திருந்ததாகவும் விமான நிலைய அதிகாரிகள் கூறினர்.
