லங்கா பிரிமியர் லீக் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்பு!

இம்முறை இடம்பெறவுள்ள 6 ஆவது லங்கா பிரிமியர் லீக் தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 ஆவது லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் டிசம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இருபதுக்கு 20 வடிவமாக இடம்பெறும் இந்த தொடரில் 24 போட்டிகள் நடைபெற உள்ளன.

முதல் 20 போட்டிகளும் லீக் போட்டிகளாக நடைபெறும் அதேவேளை எஞ்சிய போட்டிகள் வௌியேற்றும் போட்டிகளாக இடம்பெறும்.

குறித்த போட்டிகளில் இந்திய அணி வீரர்கள் இணையவுள்ளதுடன் அவர்களது பெயர் விபரங்கள் விரைவில் வௌியிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது லங்கா பிரிமியர் லீக் ரசிகர்களிடையே மேலும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நன்றி

Leave a Reply