லயம் – கொ. தினேஸ்.

 

லயம் என்று சொன்னால் உங்கள் மனக்கண்ணில் வருவது என்ன? எத்தனை பேருக்கு தெரியும் இது மலையக மக்கள் வாழும் வீட்டு தொகுதி என்று. வாருங்கள் பார்ப்போம் மலையக மாந்தர்கள் “மனம் கொண்டதே மாளிகை” என கருதி வாழும் லயத்தை பற்றி.

ஒற்றை, இரட்டை வரிசையில் சிறு சிறு அறைகளைக் கொண்டிருக்கும். ஒற்றை வரிசையாக இருந்தால் 12 அறைகளும் இரட்டை வரிசையாக இருந்தால் 24 அறைகளும் கொண்டதாக  லயம் இருக்கும், 12 அறைகள் கொண்ட லயன் தொகுதியை மலையக மக்கள் “12 காம்பரா” எனவும் 24 அறைகளைக் கொண்ட லயன் தொகுதியை “24 காம்பரா” என அவர்களின் பேச்சு மொழியில் அழைப்பர்.

10 முதல் 12 லயன்களைக் கொண்டது ஒரு டிவிசனாக கொள்ளப்படும் இங்கு “டிவிசன்” (னுiஎளைழைn) என்பது பிரிவு ஆகும். இவ்வாரு 3 தொடக்கம் 5 டிவிசன்களை கொண்டது ஒரு தோட்டமாக (நுளவயவந) கொள்ளப்படும்.

  • உதாரணம் – களுத்துறை மாவட்டத்தில் ஹல்வத்துறை தோட்டத்தில் காகல டிவிசன், தெல்மேல்ல டிவிசன், கீழ் பிரிவு, மேல் பிரிவு, மத்திய பிரிவு என ஐந்து டிவிசன்கள் (பிரிவுகள்) காணப்படுகின்றன.

லயத்தின் ஒரு அறையின் அளவு 10ழூ20 என நீள, அகலங்களை  கொண்டு இருக்கும். அத்தோடு அதற்கு முன் 6ழூ10 அகல நீளங்களை கொண்ட “குசினி”(சமயலறை) அல்லது “இஸ்தோப்பு” பகுதி காணப்படும். ஒரு அறைக்கு ஒரு கதவு மாத்திரமே காணப்படும். ஒற்றை வரிசை லயமாக இருக்கும் போது சில நேரம் இரண்டு கதவுகள் காணப்படும். லயத்தின் அனைத்து கதவுகளும் இரண்டு திறக்கும் பகுதிகளைக் கொண்டதாகக் காணப்படும். இஸ்தோப்பு அல்லது குசினி பகுதியில் கையை தூக்கினால் தொடக்கூடிய உயரத்தில் “அட்டல்” காணப்படும். அட்டல் என்பது பரன் ஆகும். விறகு சேகரித்து வைத்திருக்கும் இடமாகும்.

லயத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு அறை. ஒரு அறைதான் அவர்களின் ஒரு வீடு.  லயத்திலிருந்து 100 அல்லது 200 மீட்டர் தூரத்தில் “லெட்டு” என மலையக மக்கள் கூறும் மலசலக்கூடம் காணப்படும். ஒரு லயத்திற்கு 2 அல்லது 3 மலசலகூடமே காணப்படும்.

ஒரு டிவிசனில்(பிரிவில்) உள்ள அனைத்து லயன்களுக்கும் இலக்கம் இடப்பட்டிருக்கும். மக்கள் லயன்களை அடையாளப்படுத்த “ஒன்னா நம்பர் லயம்”, “ ரெண்டா நம்பர் லயம்” எனவும் “மேட்டு லயம், கீ லயம்” எனவும் அடையாளப்படுத்திக் கொள்வது வழக்கம். லயம் பொதுவாக தகரத்தில் ஒரே கூரையாக மூடப்பட்டிருக்கும். தனித்தனியான கூரையமைப்பு இங்கு இல்லை.

அனைத்து லயன்களும் சுண்ணாம்பு பூச்சு பூசப்பட்டு இருக்கும். லயத்தின் பின்புறத்தினை “கோடி புறம்” என்றும் லயத்தின்  கடைசி அறை இருக்கும் பகுதியை “தொங்கல்” என்றும் அழைப்பர். ஒரு டிவிசனில் இரண்டு அல்லது மூன்று கிணறுகள் காணப்படும். அதில் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் கிணறுகள் வேறு வேறாக காணப்படும். ஒவ்வொரு டிவிசனுக்கும் பொதுவான ஒரு இடத்தில் ஒரு கோயில் இருக்கும்.

இது தான் மலையக மக்கள் “மனம் கொண்டதே மாளிகையாக” வாழும் லயன் ஆகும்.

கொ. தினேஸ்

நுண்கலை துறை, கலைக்கலாசார பீடம்,

கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை.

The post லயம் – கொ. தினேஸ். appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply