இடைக்காலப் போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலாகி 10 நாட்களுக்கு மேலாகியும் காசாவின் வடக்கு பகுதிக்கு அத்தியாவசிய உதவிகளை வழங்குவது சவாலாகவே உள்ளது.
மேலும் பிற பகுதிகளுக்கு அனுப்பப்படும் பொருட்களும் போதுமான அளவில் இல்லை என ஐ.நா மனிதாபிமான உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.
வடக்கு காசாவுக்கு செல்லும் ஜிகீம், எரெஸ் எல்லைப் பாதைகள் இஸ்ரேல் இராணுவத்தின் ஆதிக்கத்தின் காரணமாக தொடர்ந்து மூடப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனை உள்ளதாகக் கூறப்படுகிறது.
0
