0
பாட்னா: வடமாநிலங்களை புரட்டி போட்ட கனமழையால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. பீகார், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு ஜூன் 1ம் தேதி பருவமழை தொடங்கியதில் இருந்து ராஜஸ்தானில் இயல்பை விட 126% அதிக மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பெய்த கனமழையால் பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக ஆறுகள், வடிகால்கள் மற்றும் அணைகள் நிரம்பி வழிந்ததால் பல கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது.
அஜ்மீர் நகரில் அமைந்துள்ள அடார் சாகர் ஏரி நிரம்பி வழியும் நிலையில் கிராம மக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி அடைப்பை சரி செய்தனர். வரும் 27, 28 ஆகிய தேதிகளில் கிழக்கு ராஜஸ்தானில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் சில பகுதிகளில் கடும் பனிப்பொழிவும் நிலவுகிறது. சிம்லாவில் அடர்ந்த மூடு பனி சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டுள்ளன.