வன்முறை கும்பல்களின் கைகளில் கைத்துப்பாக்கி ?

 

யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பங்களில் ஈடுபட்டமை , போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவரின் நண்பரின் கையடக்க தொலைபேசியில் கைத்துப்பாக்கிகள் காணப்பட்டமை தொடர்பில்  காவல்துறையினா்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நல்லூர் – அரசடி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை கடந்த வாரம் காவல்துறையினா்  போதைப்பொருளுடன் கைது செய்திருந்தனர். குறித்த இளைஞனிடம் இருந்து, சிறிய வாள் ஒன்றினையும் காவல்துறையினா் மீட்டிருந்தனர்.

இந்நிலையில், குறித்த இளைஞனின் நண்பர்கள் தொடர்பில் காவல்துறையினா்  விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், இன்றைய தினம் திங்கட்கிழமை ஒரு இளைஞனை காவல்  நிலையம் அழைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , அவரது கையடக்க தொலைபேசியையும் காவல்துறையினா்  சோதனையிட்டுள்ளனர்

அதன் போது வாட்ஸ் அப் செயலியில் , இன்னுமொரு இளைஞன் , கைத்துப்பாக்கி மற்றும்  , தான் கைத்துப்பாக்கியுடன் காணப்படும் படத்தினை அனுப்பி இருந்தமையை  காவல்துறையினா்  கண்டறிந்திருந்தனர்.

அது தொடர்பில் இளைஞனிடம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா்  கைத்துப்பாக்கியுடன் காணப்பட்ட இளைஞன் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நன்றி

Leave a Reply