வரலாற்றில் இடம்பிடித்த ரஷிட் கான்!

சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ஆப்கானிஸ்தான் அணியின் ரஷிட் கான் (Rashid Khan) படைத்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரின் போது அவர் குறித்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதற்கு முன்னதாக நியூசிலாந்து அணி வீரரான டிம் சௌதி (Tim Southee) 164 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது.

இந்தநிலையில் 165 விக்கெட்டுகளை வீழ்த்தி குறித்த சாதனையை ரஷிட் கான் (Rashid Khan) முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply