யாழ்ப்பாணத்தில் ஆறாவது நாளான இன்றைய தினம் வியாழக்கிழமையும் எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருக்கின்றனர்.
ஆறாவது நாளாக இன்றைய தினம் வியாழக்கிழமையும் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் முன்பாக நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கின்றனர். யாழ்ப்பாணத்திற்கு போதுமான அளவு எரிபொருள் எடுத்து வரப்பட்டு தொடர்ந்து விநியோக நடவடிக்கைளை முன்னெடுத்து வரும் நிலையில் , தேவைக்கதிகமான நுகர்வு மற்றும் பதுக்கல் காரணமாக எரிபொருள் வரிசை குறையாது காணப்படுகிறது
அதேவேளை யாழ். மாவட்டத்தில் QR முறையினை பின் பற்ற மாவட்ட செயலர் வலு சக்தி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத் தக்கது.

#JaffnaFuelCrisis #Day6Queue #PetrolShortage #PanicBuying #QRSystemRequest #NorthernSriLanka
The post “வரிசைகளைக் கட்டுப்படுத்தத் திணறும் நிர்வாகம்: யாழ்ப்பாணத்தில் மீண்டும் ‘QR’ முறையை அமுல்படுத்தத் தீவிர முயற்சி!” appeared first on Global Tamil News.
