வாடாவின் விதிமுறைகளுக்கு இணங்கத் தவறிய இலங்கை தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு!

இலங்கையின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு (NADO), 2025 ஆகஸ்ட் 19 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், உலக ஊக்கமருந்து எதிர்ப்பு குறியீட்டிற்கு இணங்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை உலக ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் (WADA) உறுதிபடுத்தியுள்ளது.

2025 மார்ச் 27 அன்று நடைபெற்ற கூட்டத்தில், வாடாவின் நிர்வாகக் குழு (ExCo), இலங்கையின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பை ‘கண்காணிப்புப் பட்டியலில்’ சேர்க்க வாடாவின் சுயாதீன இணக்க மறுஆய்வுக் குழுவின் (CRC) பரிந்துரையை அங்கீகரித்தது.

இலங்கையின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு அதன் சட்ட கட்டமைப்பை மதிப்பாய்வு செய்ததன் விளைவாக இணக்க நடவடிக்கைகள் தொடர்பாக ‘கண்காணிப்பு பட்டியலில்’ சேர்க்கப்பட்டது.

பின்னர், இலங்கையின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பிற்கு, அதன் சட்ட கட்டமைப்பை திருத்துவதற்கு மேலதிகமாக நான்கு மாத கால அவகாசத்தினை வாடாவின் நிர்வாகக் குழு வழங்கியது.

ஜூலை 29, 2025 அன்று அறிவிக்கப்பட்டபடி, கண்காணிப்புப் பட்டியல் காலத்தின் முடிவில் சட்ட அமைப்பில் தேவையான திருத்தங்கள் இலங்கை இன்னும் மேற்கொள்ளவில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.

அதனால் தமது, நிர்வாக உத்தரவுகளுக்கு இலங்கையின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு இணங்காதமை தொட்ர்பான முறையான அறிவிப்பை வடா அனுப்பியது.

அதன்படி, 2025 ஜூலையில் இலங்கையின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்புக்கு அனுப்பப்பட்ட முறையான அறிவிப்பு இப்போது உடனடியாக அமுக்கு வந்துள்ளது.

நன்றி

Leave a Reply