17வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (20 ஓவர்) துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும்.
இதன் முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்குள் நுழையும்.
இந்த நிலையில் அபுதாபியில் இன்று (23) நடக்கும் சூப்பர்4 சுற்றின் 3வது ஆட்டத்தில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடமும், பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவிடமும் தோற்றது.
அதனால் இன்றைய ஆட்டம் இவ்விரு அணிகளுக்கும் வாழ்வா-சாவா மோதலாகும். இதில் தோற்கும் அணி ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான்.
The post வாழ்வா சாவா போட்டியில் இலங்கை – பாகிஸ்தான்… appeared first on Lanka Truth | தமிழ் | Latest and Breaking News from Sri Lanka.