வெனிசுலாவின் ஜனாதிபதியை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை அதிகரிப்பு!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான வெனிசுலாவின் ஜனாதிபதி மதுரோவை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை 450 கோடி இந்திய ரூபாவாக உயர்த்துமாறு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வெனிசுலாவின் ஜனாதிபதி, நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் மீது, கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியால், போதைப்பொருள் தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

அவரைக் கைது செய்ய உதவுவோருக்கு 131 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்குவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.

அதன்பின், ஜோ பைடன் நிர்வாகம் அந்தத் தொகையை 219 கோடி ரூபாவாக அதிகரித்தது.

இந்தத் தொகை சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனை கைது செய்வதற்கு அமெரிக்கா அறிவித்த பரிசுத்தொகைக்கு நிகரானது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், வெனிசுலா ஜனாதிபதி மதுரோவை கைது செய்வதற்கான பரிசுத்தொகையை 450 கோடி இந்திய ரூபாவாக உயர்த்துமாறு ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார் என அமெரிக்க அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளார்.

நன்றி

Leave a Reply