வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இருவர் கைது! – Athavan News

கட்டுநாயக்க பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அடியம்பலம பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த சோதனையின் போது 30 வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து வேறு நபர்களுக்கு சொந்தமான 35 கடவுச்சீட்டுகளும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (04) மாலை இடம்பெற்றுள்ளது.

கைதான சந்தேக நபர்கள் 22 மற்றும் 32 வயதுக்கு மேற்பட்ட வத்தளை மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

May be an image of text that says "SRI LANKA POLICE 山店 OFFICIAL NEWS වෙනත් පුද්ගලයන්ට අයත් විදේශ බලපත්‍ර හා විදේශීය මත්පැන් බෝහල් සමග සැකකරුවන් දෙදෙනෙකු අත්අඩංගුවට වෙනත් පුද්ගලයන්ට අයත් විදේශ ගමන් බලපත්‍ර (35) ක් හා විදේශීය මත්පැන් බෝතල් (30) ක් වෑන් රථයක් පරීක්ෂා කිරීමේදී හමුවෙයි DATE-2025.08.05 08 05 DATE 2025 READMORE READ MORE SRI LANKA POLICE"

நன்றி

Leave a Reply